மன்னார் – ஓலைத்தொடுவாய் பகுதியில் 200 கிலோகிராமிற்கும் அதிக நிறையுடைய கேரள கஞ்சா மீட்பு


மன்னார் – ஓலைத்தொடுவாய் பகுதியில் நேற்றிரவு  முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது 200 கிலோகிராமிற்கும் அதிக நிறையுடைய கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

கடற்படையினருடன் இணைந்து இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

கேரள கஞ்சாவை கொண்டு வந்தவர்கள் யார் என்பது குறித்து இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் சம்பவம் தொடர்பில் மன்னார் தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: