20வது திருத்தத்திற்கு எதிரான மனுக்கள் மீதான பரிசீலனை நாளை


அரசியலமைப்பின் 20ம் திருத்தச்ச ட்டமூலத்தை சலாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனையை நாளை காலை 9.30 வரை உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் பிற்போட்டுள்ளது.

20ம் திருத்தத்திற்கு எதிராக 39 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்டு நேற்று இரண்டாவது நாளாகவும் தொடர்ந்தது.

குறித்த மனுக்கள் தொடர்பில் முக்கியத்துவமிக்க சமர்ப்பணங்களை முன்வைப்பதற்கு அனுமதிக்கோரி 8 தரப்பினர்களால் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.நேற்று இரவு 7.30 மணிவரை மனுக்கள் மீதான பரிசீலனைகள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.No comments: