கொவிட் 19ன் தொடர்பில் திருக்கோவில் பிரதேச செயலகத்தில் முன்னாயத்த கலந்துரையாடல்


நாட்டில் தற்போது பரவிவரும் கொவிட்19 தாக்கத்தினை தடுப்பதற்காக பிரதேச செயலகப்பிரிவுகுட்பட்ட இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தும் முகமாம முன்னாயுத்த கலந்துரையாடல் ஒன்று திருக்கோவில் உதவிப்பிரதேச செயலாளர்K.சதிசேகரன்

தலைமையில் திருக்கோவில் பிரதேச செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது .

இக்கலந்துரையாடலில் எடுகப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் ,பொது மக்கள் வீட்டில் இருந்து வெளியேறும் போது முகக்கவசம் அணிதல்,மக்கள் கூட்டமாக நிற்பதை தவிர்த்தல், மற்றும் வெளிச்சூழலில் இருந்து வீட்டுக்கு சென்றவுடன் கைகளை சவற்காரம் அல்லது கையை சுத்தசெய்யும் பதார்த்தங்களை இட்டு கைகளை கழுவுதல் வேலை இல்லா நேரங்களில் அநாவசியமாக வெளியில் வருவதை தடுத்தல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் இவ் விடயங்களை கடைப்பிடித்தால் தொற்றில் இருந்து நாம் பாதுகாப்பு பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில்திருக்கோவில் பிரதேச செயலாளர் T.கஜேந்தாரன், திருக்கோவில் பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர் K.சதிசேகரன் மற்றும் உதவித்திட்டமிடல் பணிப்பாளர் m.அனோஜா  நிறுவாக உத்தியோர்த்தர் j.கணேஷ்சராஜா நிறுவாக கிராம உத்தியோர்த்தர் s.பரிமளவாணி, சிரேஷ்ர கிராம உத்தியோர்த்தர் இராஜரெட்ணம், திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி SS.CI.ஜெயவீர ,திருகோவில் காஞ்சிரன்குடா 242 இராணுவ முகாம் கட்டளைதளபதி டிஷாநாயக்கா  திருக்கோவில் வைத்தியசாலை அதியட்சகர்  Dr.A.b.மஸ்ஹுத் திருக்கோவில் விசேட அதிரடிபடை கட்டளைத்தளபதி ,திருக்கோவில் பொது சுகாதாரவைத்திய அதிகாரிகள் மற்றும் பிரதேச சபை தவிசாளர் கமலராஜன் மற்றும் அக்கரைபற்று தெற்கு பலநோக்கு க் கூட்டுறவுச்சங்கப் பொது முகாமையாளர் இ.மகேஸ்வரன்ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.





No comments: