பொகவந்தலாவ பகுதியில் இரண்டு குடும்பங்களை சேர்ந்த 17 பேர் சுயதனிமைப்படுத்தல்

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் 


கொழும்பு பகுதிக்கு சென்று பொகவந்தலாவ பகுதிக்கு வாகனம் ஒன்றில் மீன் ஏற்றிவந்த இரண்டு பேருக்கு பி. சி. ஆர். பரிசோதனைகளை மேற்கொண்டு பி.சி.ஆர் பரிசோதனையின் மாதிரிகள் எடுக்கப்பட்டு ரந்தெம்பே பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நடவடிக்கை 23.10.2020.வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதேவேளை குறித்த இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 17 பேர் 14 நாட்களுக்கு சுயதனிமைபடுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்களின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 

குறித்த சம்பவத்தினை அறிந்த பொது சுகாதார பரிசோதகர்கள் விரைவாக இந்த நடவடிக்கையினை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments: