எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் ஒருவார காலத்திற்கு தேசிய டெங்கு ஒழிப்பு வாரம்


நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் ஒருவார காலத்திற்கு தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில்  பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை  குறைவடைந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் பணிப்பாளர், வைத்தியர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

No comments: