போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் 13 அதிகாரிகளுக்கான விளக்கமறியல் நீடிப்பு


பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் சிலருக்கான விளக்கமறியல் தொடர்ந்தும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் 13 அதிகாரிகளை ஒக்டோபர் 26ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் போதைப் பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: