ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 125 பேர் கைது


ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 125 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

நாட்டின் 24 பொலிஸ் பிரிவுகளில் இதுவரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இன்று காலை ஆறு மணிவரையான 24 மணித்தியால காலப்பகுதியிலேயே, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட காலப்பகுதியில், அதிக எண்ணிக்கையிலான நபர்கள் கைது செய்யப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், கம்பஹா பகுதியைச் சேர்ந்த நபர்களே அவர்களில் அதிகம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், கடந்த 24 மணித்தியால காலப்பகுதியில் 63 வாகனங்களும் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ஊரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட கடந்த நான்காம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் 513 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: