டிக்கோயா புளியாவத்தை ஹோன்சி தோட்டப்பகுதியில் 12 குடும்பங்களை சேர்ந்த 65 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்


மினுவாங்கொட பிரண்டிக்ஸ் ஆடைதொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த பெண் ஒருவர்

டிக்கோயா புளியாவத்தை ஹோன்சி தோட்டப்பகுதிக்கு வந்துள்ளமையால் குறித்த
பெண்ணுக்கு கொரோனா தொற்று இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில்  பெண்ணின்
கணவர், தாய், இரண்டு பிள்ளைகள் மொத்தம் ஜந்து பேர் பி.சி.ஆர் பரிசோதனைக்காக
ரந்தெம்பகுதிக்கு இரானுவத்தினரின் பாதுகாப்போடு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த தோட்டபகுதியில் 12 குடும்பங்களை சேர்நத 65 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக  பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர். 

 இந்த நடவடிக்கையானது 09.10.2020.வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

குறித்த பெண் மினுவாங்கொட பிரண்டிக்ஸ் ஆடை தொழிற்சாலையில் பணிபுரிந்து
08.10.2020 வியாழக்கிழமை விடியற்காலை பேருந்தின் ஊடாக ஹட்டனுக்கு வந்து
ஹட்டனில் இருந்து டிக்கோயா புளியாவத்தை ஹோன்சி தோட்டப்பகுதிக்கு வேன்
ஒன்றில் வந்ததாக பொது சுகதார பரிசோதகர்ளின் ஆரம்பகட்ட விசாரணைகளில்
இருந்து தெரியவந்துள்ளது.

இதேவேளை தனிமைப்படுத்தபட்டுள்ள 12 குடும்பங்களை சேர்ந்த 65 பேருக்கான நிவாரணங்களை வழங்க தோட்டநிர்வாகம் முன்வந்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.
No comments: