ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறிச் செயற்பட்ட குற்றச்சாட்டில் 1122 பேர் கைது


தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 46 பேர் கைது செய்யப் பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அதன்படி கடந்த ஒக்டோபர் 4ம் திகதி முதல் தற்போது வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறிச் செயற்பட்ட குற்றச்சாட்டில் இதுவரை 1122 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நேற்றைய தினம் 7 வாகனங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதோடு,ஒக்டோபர் 04 ஆம் திகதி முதல் தற்போது வரை 163 வாகனங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

No comments: