சட்டவிரோதமான முறையில் தயாரிக்கப்பட்ட 10 துப்பாக்கிகள் மீட்பு - 8 சந்தேக நபர்கள் கைது

 வி.சுகிர்தகுமார் 


சட்டவிரோதமான முறையில் தயாரிக்கப்பட்ட 10 துப்பாக்கிகளை திருக்கோவில் பொலிசார் கைப்பற்றியதுடன்  8 சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.


திருக்கோவில் பொலிஸ் நிலைய விசேட தகவல் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.ஜயவீர தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட அதிரடி தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த தேடுதல் நடவடிக்கையானது சாகாமம் கஞ்சிகுடியாறு சின்னத்தோட்டம் தமப்pலுவில் திருக்கோவில் விநாயகபுரம் மற்றும் மண்டானை ஆகிய பிரதேசங்களில் 28 மற்றும் 29ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்டதாகவும் இதன்போதே குறித்த 3 சொட்கண் உள்ளிட்ட உள்ளுர் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிசார் குறிப்பிட்டனர்.

மேலும் பயன்படுத்தக் கூடிய புதிய 6 ரவைகளும் பயன்படுத்திய 11 வெற்று ரவைகளும் ரவைகளுக்கு பயன்படுத்தும் வெடி பொருட்களும் கைப்பற்றப்பட்டதாகவும் கூறினர்.

கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகளையும் சந்தேக நபர்களையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த திருக்கோவில் பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்ற நிலையில் அன்மைக்காலமாக அதிகளவான சட்டவிரோத துப்பாக்கிகளை திருக்கோவில் பொலிசார் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினர் கைப்பற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: