தமிழரால் ஆரம்பிக்கப்பட்ட உலகப் புகழ் பெற்ற TVS நிறுவன வரலாறு ஒரு பார்வை


உலகளவில் புகழ்பெற்ற தமிழனால் தொடங்கப்பட்ட TVS நிறுவன வரலாற்றைப் பார்ப்போம்.

TVS நிறுவனத்தை T.V.Sundaram Iyengar 1911ல் மதுரையில் துவங்கினார்.

முதலில் மதுரையில் பேருந்து இயக்கம் நிறுவனமாக தான் இது இருந்தது.அப்போதைய சென்னை மாகாணத்தில் முதன்முதலில் பேருந்து சேவையை தொடங்கியவர் இவரே.

1919ல் வாகனங்களுக்கான உதிரிப் பாகங்கள் விற்கும் நிறுவனத்தையும் துவக்கினார் சுந்தரம்.

2ம் உலகப்போரின் போது பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்ட போது சென்னையில்  TVS Gas Plant துவக்கினார்.

Madras Auto Service Ltd நிறுவனத்தை வாங்கி General Motors  நிறுவனத்தின் கார்களை விற்பனை செய்தார்.அத்துடன் Sundaram Motors நிறுவனத்தை துவக்கினார் சுந்தரம்.

சுந்தரம் ஐயங்காரின் காலத்திற்குப் பிறகு இவர் வாரிசுகள் நிறுவனத்தை தொடங்கினர்.

1978ம் ஆண்டு இருச்சக்கரம் மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் உற்பத்தியில் இறங்கியது TVS.

இந்நிறுவனம் அறிமுகப்படுத்திய  TVS 50 மற்றும் TVS XL பெரும் வரவேற்பை பெற்றது.

இன்றைக்கு பல மாடல்களில் பைக்களை அறிமுகப்படுத்தி இந்தியாவின் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாக உள்ளது TVS.

தற்போது TVS குழுமத்தில் 73 நிறுவனங்கள் உள்ளன.மற்றும் வாகனங்களுக்குத் தேவையான உதிரிப்பாகங்களும் இந்நிறுவனம் தயாரிக்கின்றது.

129 நாடுகளில் TVS நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

சுமார் 60,000 பேர் TVS நிறுவனங்களில் பணிபுரிகிறார்கள்.60,000 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெறுகிறது.

தமிழகத்தில் சிறியளவில் தொழில் துவங்கி உலகளவில் வளர்ந்துள்ள TVS நிறுவனம் அனைவருக்கும் சிறந்த வழிகாட்டி.

No comments: