பிரபல பாடகர் எஸ்.பி.பி யின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்


பிரபல பாடகர் எஸ்.பி.பி.பாலசுப்பிரமணியத்தின் மறைவுக்கு திரைக் கலைஞர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் துரதிர்ஷ்டவசமான மறைவுடன், நமது கலாசார உலகம் மிகவும் ஏழ்மையாகிவிட்டது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், இந்தியா முழுவதும் எஸ்.பி.பி. ஒரு வீட்டுப் பெயர் எனவும் அவரது இனிமையான குரல் மற்றும் இசை பல தசாப்தங்களாக இரசிகர்களைக் கவர்ந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், எஸ்.பி.பி.யின் மறைவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருடனும் அபிமானிகளுடனும் துயர்பகிர்வதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.


No comments: