'எந்தன் மூச்சும் எந்தன் பாட்டும் அணையா விளக்கே' உயிரிழந்தார் SPB

 

பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நலக்குறைவு காரணமாக தனது 74 ஆவது வயதில் சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார்.

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் இன்று உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு கடந்த ஓகஸ்ட் மாதம் 5-ம் திகதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,சிகிச்சைப் பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார்.

No comments: