( Miss Call )மிஸ் கோலினால் வாழ்க்கையை பாழாக்கிகொள்ளும் குடும்பப் பெண்கள்
கிழக்கில் பெண்கள் கையடக்க தொலைபேசியின் ஊடாக வரும் போலியான மிஸ் கோலின் மூலம் பல்வேறு பிரச்சினைகளுக்கும் முகம் கொடுத்துவருகின்றனர்.
சமீப காலமாக சில பெண்களது கையடக்கத் தொலைபேசிகளுக்கு போலியான மிஸ் கோலினால் தொல்லைகள் கொடுக்கப்பட்டு வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் வெளியில் சொல்லமுடியாமல் தவிக்கின்றனர்.
இந்த மிஸ் கோலினை எடுத்துக்கொண்டால் எந்தப் பெயர் அடையாளப் பதிவும் இருக்காது இந்த போலியான மிஸ் கோலினால் பெண்கள் தங்களுடைய சுபீட்சமான குடும்ப வாழ்க்கையை கூட இழந்து நிற்கின்றனர்.
மிஸ் கோலினால் பல குடும்பப்பெண்கள் தங்களுடைய அன்பான கணவனை, பிள்ளைகளை இழந்து இரண்டும் கெட்டான் வாழ்க்கையை வாழக்கூடிய நிலைக்கு புறம் தள்ளப்பட்டு நிற்கிறார்கள்.
மிஸ் கோலினால் பல குடும்பப்பெண்கள் தங்களுடைய அன்பான கணவனை, பிள்ளைகளை இழந்து இரண்டும் கெட்டான் வாழ்க்கையை வாழக்கூடிய நிலைக்கு புறம் தள்ளப்பட்டு நிற்கிறார்கள்.
யார் ? எவர் ? எந்த முகம் ? என தெரியாமல் தங்களை மறந்து மிஸ் கோல் அழைப்பாருடன் உறவைப்பேணி இன்று நிற்கதியான நிலையில் கண்ணீருடன் சிலர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
இதேபோன்று பேஸ்புக்கில் போலியான தகவல்களினால் பெண்கள் சமூகம் ஏமாற்றப்படுவதும் நடந்தேறிவருகின்றது.
இதேபோன்று பேஸ்புக்கில் போலியான தகவல்களினால் பெண்கள் சமூகம் ஏமாற்றப்படுவதும் நடந்தேறிவருகின்றது.
நவின இலத்திரனியல் சாதனங்களின் வருகைக்குப் பின் ஆண்களை விட பெண்களின் பாதுகாப்பிற்க்கு அதிக அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
No comments: