கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் இந்தியா இரண்டாவது நாடாகப் பதிவு

கொரோனா தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் இந்தியா இரண்டாவது நாடாக பதிவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்தியாவில் இன்றைய தினத்தின் இதுவரையான காலப்பகுதியில் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்ட நிலையிலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இந்தியாவில் இதுவரையான காலப்பகுதியில் 71 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதோடு 42 லட்சத்து 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளதோடு,அமெரிக்காவில் இதுவரை எட்டு லட்சத்து 93 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், 64 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments: