மருத்துவ நிர்வாக பரீட்சையில் சித்தியடைந்து உயர்கற்றை நெறிக்காக இடமாற்றம் பெற்றுச் செல்லும் வைத்தியர் றெமன்ஸ் அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு

 வி.சுகிர்தகுமார்     


அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் 13 வருடங்கள் சேவையாற்றி மருத்துவ நிர்வாக பரீட்சையில் சித்தியடைந்து உயர்கற்றை நெறிக்காக இடமாற்றம் பெற்றுச் செல்லும் வைத்தியர் றெமன்ஸ் அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது.

வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஐ.எம்.ஜவாஹிர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வைத்திய நிபுணர்கள் வைத்தியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்ட அவரை பலரும் வாழ்த்தி பேசினர். அத்தோடு வைத்தியசாலையின் வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய சேவைகள் தொடர்பிலும் நினைவூட்டினர். சத்திர சிகிச்சை பிரிவு கழிவு முகாமைத்துவ பிரிவு மற்றும் தர முகாமைத்துவ பிரிவில் கடமையாற்றி அவர் கழிவு முகாமைத்துவ பிரிவில் கடமையாற்றிய போது கழிவு முகாமைத்துவ சூழல் பாதுகாப்பிற்கான ஜனாதிபதி தங்க விருது பெற முன்னின்று உழைத்தமை தொடர்பிலும் நன்றி தெரிவித்தனர்.

நிறைவினில் அவரது சேவையினை பாராட்டும் வகையில் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் உள்ளிட்டவர்களால் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
No comments: