எபோட்சிலி தோட்டத்தில் கசிப்பு மீட்பு - இருவர் கைது

 பொகவந்தலா நிருபர்.சதீஸ் 


அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எபோட்சிலி தோட்டத்தில் கசிப்பு உற்பத்தி  செய்த இருவரை அட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய 14 ம் திகதி மாலை மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 25 லீட்டர் கசிப்பு மற்றும் 25 லீட்டர் கோடாவும் மீட்கப்பட்டுள்ளது.

எபோட்சிலி தோட்ட காட்டுப்பகுதியில் கசிப்பு தயாரிப்பிற்கு பயன்படுத்திய உபகரணங்களுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபரையும் அட்டன் நீதவான் நீதின்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

No comments: