கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய ஒருவருக்கு மீண்டும் கொரோனா தொற்றுறுதி


சிலாபம், ஆராச்சிகட்டுவ பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்து வீடு திரும்பிய ஒருவருக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

23 வயதுடைய குறித்த நபர் கடந்த மாதம் 16ம் திகதி டுபாயில் இருந்து இந்நாட்டுக்கு வருகை தந்திருந்த நிலையில், கொரோனா தொற்று உறுதிப்பட்ட காரணத்தால் வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பின்னர் அவர் சிகிச்சைப் பெற்று கடந்த 8ம் திகதி வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியிருந்தார். இதன்போது அவரை 14 நாட்கள் வீட்டில் சுயதனிமைப்படுத்தலில் வைத்திருந்த போது இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: