பலாங்கொடையில் மாணவி கொலை சம்பவத்தில் சந்தேக நபர் ஒருவர் கைது


பலாங்கொடை – ஒலுகன்தோட்டம், வெலிஹரனாவ பிரிவில் மாணவி ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த மாணவியின் பெற்றோருடன் நெருங்கிப் பழகிய ஒருவரே சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் மாணவியின் சடலம் மீதான பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது, கழுத்து நெரிக்கப்பட்டு மாணவி கொலை செய்யப்பட்டமை உறுதி செய்யப்பட்டது.

சம்பவம் தொடர்பில் பலாங்கொடை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: