பிரேமலால் ஜெயசேகர பதவிப்பிரமாணம்-எதிர்கட்சி தரப்பினர் வெளிநடப்பு

பிரேமலால் ஜயசேகரவின் பதவிப்  பிரமாணத்தினையடுத்து ஐக்கிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த  பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது, சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரேமலால் ஜயசேகர இன்றையதினம் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதாகவும்.பாராளுமன்றத்தில் எதிர்கட்சியின் எதிர்ப்பிற்கு மத்தியில் அவரது பதவிப்பிரமாணம் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: