இங்கிலாந்திலிருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட குப்பைகள் அடங்கிய கொள்கலன்கள் அந்நாட்டிற்கு அனுப்பிவைப்பு


இங்கிலாந்திலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 263 குப்பைகள் அடங்கிய கொள்கலன்களில் 21 கொள்கலன்கள் நேற்றையதினம் அந்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும்,சம்பந்தப்பட்ட அனைத்து கொள்கலன்களையும் ஏற்க இங்கிலாந்து ஒப்புக் கொண்டதாகவும் இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

2017ம் ஆண்டுமுதல் இலங்கைக்கு 247 கொள்கலன்கள் மூலம் இந்த குப்பைகள் கொண்டு வரப்பட்டுள்ளமை விசாரணைகள் ஊடாக தெரியவந்துள்ளதாக சுங்கம் திணைக்களம் தெரிவித்திருந்தது.


No comments: