இன்று நாடு திரும்பிய இலங்கையர்கள்


கொரோனா தொற்றுக் காரணமாக  வெளிநாடுகளில் தங்கியிருந்த மேலும் 97  இலங்கையர்கள் இன்று காலை நாடு திரும்பியுள்ளனர்.

கட்டாரில் இருந்து 73 பேரும், அபுதாபியில் இருந்து 24 பேரும் விசேட விமானம் மூலம்  இன்று காலை  நாடு திரும்பியுள்ளனர்

நாடு திரும்பியுள்ள அனைவரும் பீ.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments: