தீ விபத்தக்குள்ளான கப்பலை ஆராய்வதற்காக ஹம்பாந்தோட்டடை துறைமுகத்திலிருந்து புறப்பட்ட விசேட குழு


தீ விபத்துக்குள்ளான நியூ டயமன்ட் கப்பலை ஆராய்வதற்காக வருகைத் தந்திருந்த விசேட குழுவினர் இன்று அதிகாலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து நியூ டயமன்ட் கப்பலை நோக்கி புறப்பட்டுச் சென்றதாக தெரியவந்துள்ளது.

இதேநேரம், நியூ டயமன்ட் கப்பலில் தீ முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்த போதிலும் நேற்று இரவு மீண்டும் தீப்பரவல் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.

கப்பல் தற்போது காணப்படும் சங்கமன்கண்டியில் இருந்து 30 கடல்மைல் தொலைவில் வீசும் பலத்த காற்று காரணமாகவும் கப்பலின் உள்பகுதியில் காணப்படும் அதிக வெப்பம் காரணமாகவும் இவ்வாறு மீண்டும் தீ பரவ ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இரசாயன பொருட்களையும் நீரையும் பயன்படுத்தி வெப்பத்தை தணிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.




No comments: