விவசாய உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு.

 செ.துஜியந்தன்


தேசிய விவசாய ஊக்குவிப்பு வாரத்தினை முன்னிட்டு வர்த்தக நோக்கில் பழங்களை உற்பத்தி செய்யும் இறக்காமம் பிரதேச விவசாயிகளுக்கு சிறந்த விவசாய செய்முறைகளை (GAP)  அறிமுகம் செய்தலும்,விவசாய பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வும்  இறக்காமம் விவசாய  விரிவாக்கல் நிலைய பொறுப்பு விவசாய போதனாசிரியர் எஸ்.ஏ.எம்.அஸ்ஹர் தலைமையில் இன்று இறக்காமத்தில்  இடம்பெற்றது.

நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் எம்.எப்.ஏ. சனீர்  வளவாளராக பாடவிதான உத்தியோகத்தர் எம்.எம்.ஜமீல் ,விவசாய போதனாசிரியர்களான ஏ.எல்.மனாஸர்,எஸ்.எம்.ஹேவாவிதாரண உட்பட விவசாயிகளும் கலந்து கொண்டனர்.

இதன் போது கருத்து தெரிவித்த வளவாளர் அதிகரித்த விவசாய உரப்பாவனையால் தொற்றா நோய்கள் அதிகம் ஏற்படுவதாகவும், தொற்று நோய்களை விட தொற்றா நோய்களுக்கே பயப்பட வேண்டியுள்ளதாகவும் கூறினார். நோயற்ற சமுதாயத்தை கட்டியெழுப்ப விவசாயிகள் உதவ முன்வர வேண்டும் என கோரிக்கையும் விடுத்தார்.
No comments: