அங்கஜன் இராமநாதன் இன்றைய தினம் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவராக அங்கஜன் இராமநாதன் இன்றையதினம் தனது கடைமைகளை உத்தியோகபூர்வமாக  பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

யாழ் மாவட்ட செயலகத்தில் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அதிகார சபையின் அலுவலகம் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டுள்ளதாகவும்  யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித்தவிசாளரும், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு அலுவலகத்தை திறந்து வைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து சர்வமத தலைவர்களின் ஆசீர்வாதத்துடன் அரசாங்க அதிபர் முன்னிலையில், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவராக அங்கஜன் இராமநாதன் தனது கடைமைகளையும் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments: