தொழில்வாய்ப்பினை பெற்றுத்தருவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபடும் நபர்களை கைது செய்ய நடவடிக்கை


தொழில்வாய்ப்பினை பெற்றுத்தருவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபடும் நபர்களை கைது செய்யுமாறு நீதி  அமைச்சர் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளதாக நீதி அமைச்சு இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் ஊடாக  துரித விசாரணைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

இதேவேளை வேலைவாய்ப்பின்றி காணப்படும்  இளைஞர் யுவதிகள் நீதி அமைச்சில்  முன்வைத்துள்ள முறைப்பாட்டிற்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்,வேலைவாய்ப்பினை பெற்றுத்தருவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளவர்கள் தொடர்பில்  தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments: