தீ விபத்துக்குள்ளான கப்பலின் கேப்டனை விளக்கமறியலில் வைக்க உத்தரவு


கிழக்கு கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான நியூ டயமன்ட் எண்ணெய்க் கப்பலின் கேப்டனை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்புக் கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதைத் தொடர்ந்தே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீயைக் கட்டுப்படுத்த தானியங்கி நடவடிக்கைகளைப் பின்பற்றத் தவறியமை மற்றும் தீப்பரவல் குறித்து பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுக்கு அறிவிக்கத் தவறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்த கேப்டனுக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.


No comments: