முச்சக்கரவண்டியொன்றினை கடத்த முற்பட்ட தம்பதியினர் கைது


முச்சக்கரவணடியொன்றில் வாடகைக்குப் பயணித்த தம்பதியொன்று குறித்த முச்சக்கரவண்டியை கடத்த முற்பட்ட சம்பவமொன்று நேற்று ஹம்மாதகம பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

குறித்த தம்பதிகள் சிங்கராஜா பிரதேசத்திற்கு குறித்த முச்சக்கரவண்டியில் வாடகைக்கு பயணம் செய்துள்ள போது,ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து சாரதியின் கண்களுக்கு  மிளகாய்த்துாளினால் தாக்குதலை மேற்கொண்டு கூரிய ஆயுதத்தினால் தாக்கிவிட்டு முச்சக்கரவண்டியை கடத்த முயன்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வண்டியின் சாரதி கூச்சலிட்டதைத் தொடர்ந்து ,தம்பதியினர் அங்கிருந்து தப்பிக்க முயற்சித்த போது,பிரதேச மக்கள் அவர்கள் இருவரையும் மடக்கிப் பிடித்து காவற்துறையினரிடம் ஒப்படைத்த நிலையில் இருவரும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments: