கட்டிடத்தின் இடிபாடுகளை அகற்றும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுப்பு


கண்டி, பூவெலிகட பகுதியில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளை அகற்றும் நடவடிக்கை இன்று தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பூவெலிகட பகுதியில் நேற்று காலை 5 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்திருந்தது.

குறித்த கட்டிடம் உடைந்து அருகில் இருந்து வீட்டின் மீது விழுந்ததில் குறித்த வீட்டில் இருந்த தாய், தந்தை மற்றும் கைக்குழந்தை ஒன்று உயிரிழந்திருந்தனர்.

இதேவேளை நேற்று மாலை இடம்பெற்ற இடிபாடுகளை அகற்றும் நடவடிக்கை சீரற்ற காலநிலை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: