விபத்துக்குள்ளான கப்பலில் இருந்து காயமடைந்த நிலையில் ஒருவர் மீட்பு


கிழக்கு கடற்பரப்பில் விபத்துக்குள்ளான கப்பலில்  இருந்து  காயமடைந்த நிலையில்  ஒருவர் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கிழக்கு கடற்பரப்பில் அருகம்பே பகுதியில் இருந்து சுமார் 38 கடல்மைல் தொலைவில்  MT NEW DIOMAND எனும் எண்ணெய் கப்பல் இன்று தீவிபத்துக்குள்ளாகியுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் மீட்பு பணிகளை முன்னெடுப்பதற்காக இரண்டு கப்பல்கள் குறித்த பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக  இலங்கை  கடற்படைப் பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா தெரிவித்தார்.இந்த சம்பவம் இன்று முற்பகல் 8.30 அளவில் இடம்பெற்றதாக கடற்படை தலைமையகம் குறிப்பிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

விபத்து இடம்பெற்ற வேளை குறித்த கப்பலில் 23 பேர் பயணித்துள்ள நிலையில் அவர்களுள் 22 பேர் பாதுகாப்பான முறையில் மீட்கப்பட்டுள்ளதாகவும் கடற்படைப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில்  காணாமல்  போயிருந்த ஒருவர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: