கட்டிட நிர்மாணம் தொடர்பாக அரசாங்கத்தின் புதிய முறைமை


ஆபத்தான கட்டிடங்களை அடையாளங்காண்பதற்கும், புதிதாக நிர்மாணிக்கப்படுகின்ற கட்டிடங்களுக்கு அனுமதியை வழங்குவதற்கும், புதிய முறைமையொன்றை கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன் முதற்கட்டமாக, கட்டிடங்கள் தொடர்பில் ஆராய்கின்ற உள்ளூராட்சி மன்ற அதிகாரிகளுக்கு, புவிச் சரிதவியல் மற்றும் அளவைப் சுரங்கப் பணியகத்தினால் விசேட பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன், இடிந்து வீழ்ந்த பெருமளவான கட்டிடங்கள், உள்ளூராட்சி மன்ற அதிகாரிகளின் அனுமதியுடனேயே நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார்.

கண்டி பூவெலிக்கடைப் பகுதியில், அண்மையில் ஐந்து மாடிக் கட்டிடமொன்று இடிந்து வீழ்ந்ததையடுத்தே, இவ்வாறு விசேட கவனஞ் செலுத்தப்பட்டுளதாகவும்,கண்டி பூவெலிக்கடைப் பகுதியில் இடிந்து வீழ்ந்த கட்டிடம், உரிய முறையில் நிர்மாணிக்கப்படவில்லை என ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.

ஐந்து மாடிகளை தாங்கும் திறன் இல்லாத நிலையிலேயே, குறித்த கட்டிடத்தின் அடித்தளம் கட்டப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, கண்டி பூவெலிக்கடை கட்டிடம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையும், இன்றைய தினம் மத்திய மாகாண ஆளுனரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

அத்துடன், குறித்த கட்டிடத்தின் உரிமையாளர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments: