நியூ டயமன்ட் கப்பலின் தலைவரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்தல்


நியூ டயமன்ட் கப்பலின் தலைவர் திரோஸ் இலியாஸை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய அவரை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 28 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த அனர்த்தம் தொடர்பாக கடல் சுற்றாடல் சட்டத்தின் கீழ், நீதிமன்றில் விளக்கமளிப்பதற்காக நியூ டயமண்ட கப்பலின் தலைவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான, அழைப்பாணையை பெறுமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளருக்கு சட்ட மா அதிபரினால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.

கிரேக்க நாட்டவரான திரோஸ் இலியாஸ் எனும் குறித்த கப்பலின் தலைவர், காலியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே, அவரிடம் சி.ஐ.டி. விசாரணைகளை முன்னெடுத்ததன் பின்னணியிலேயே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கப்பலில் ஏற்பட்ட தீயை அணைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக 340 மில்லியன் ரூபாய் (ரூ. 34 கோடி) நஷ்ட ஈடாக செலுத்துமாறு சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரோவினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


No comments: