நாட்டில் நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் பற்றிய விபரம்

நாட்டில் நேற்றைய தினம் 6 பேர் கொரொனா தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில்  இருந்து நாடு திரும்பிய 3 பேருக்கும்,கட்டார் பஹ்ரேன் ஆகிய  நாடுகளில் இருந்து மீண்டும் நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட  தலா ஒருவருக்கும்   கந்தக்காடு புனர் வாழ்வழிப்பு நிலையத்தில் சிகிச்சைப் பெற்று வந்த கைதி ஒருவருக்கும் நேற்றைய தினம் கொரோனா தொற்றுறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3121 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை தொற்றுறுதியான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த 11 பேர் நேற்றைய தினம் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதோடு, இதுவரை கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2918 ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும் கொரோன தொற்றுறுதியான 191 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments: