ஜனாதிபதியிடமிருந்து பொது மக்களுக்கான மற்றுமொரு சலுகை

ஜனாதிபதி செயலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில், மக்கள் வசிக்கும் சட்ட ரீதியான சிக்கல்கள் அற்ற இடங்களுக்கு 3 மாதங்களுக்குள் காணி உறுதி பத்திரங்களை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உயரதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

நாடளாவிய ரீதியில் தாம் மேற்கொண்டிருந்த மக்கள் சந்திப்பிற்கான பயணத்தின் போது பலரும் முன்வைத்த  கோரிக்கைளில் ஒன்றுதான் காணி உரிமம் தொடர்பான பிரச்சினைகள்.மக்களின் நலனை கருத்திற் கொண்டு அவர்களுக்கு காணி உரிமங்களை பெற்றுக் கொடுப்பதே முதலாவது கடமையாகும் எனவும் அவர் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: