நாட்டில் நேற்றைய தினத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் பற்றிய விபரம்


நாட்டில்  நேற்றைய தினத்தில்  மாத்திரம் 28 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி  நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3262 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3005 ஆக அதிகரித்துள்ளது.

இதனையடுத்து மேலும் 244 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேவேளை நேற்று மாலை சிலாபம் வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதற்கமைய நாட்டில்  கொரோனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: