மின்சார வேலையில் ஈடுபட்டிருந்த இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான கனரக டிப்பர் வாகனம் ஒன்று வீதியில் சரிந்து வீழ்ந்துள்ளது

 செ.துஜியந்தன்

மின்சார வேலையில் ஈடுபட்டிருந்த இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான கனரக டிப்பர் வாகனம் ஒன்று வீதியில் சரிந்து வீழ்ந்துள்ளது. இதில், பணியில் ஈடுபட்டிருந்த மின்சாரசபை ஊழியர்கள் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர்.

இச்சம்பவம் மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு பிரதானவீதியில் இடம்பெற்றது. இன்று காலை தொடக்கம் மாலை வரை கிரான்குளம் தொடக்கம் புதுக்குடியிருப்பு பிரதான வீதியில் புதிய அதியுயர் மின்கம்பங்களை நடும் பணியில் மின்சார சபையின் ஊழியர்கள் ஈடுபட்டனர். 

இந்நிலையில் அதியுயர் மின்கம்பங்களை சுமந்து சென்று நடும்பணியில் ஈடுபட்டிருந்த கனரக டிப்பர் வாகனம் பாரம் தாங்க முடியாது சரிந்து கீழே வீழ்ந்துள்ளது. அந் நேரம் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் தெய்வாதீனமாக ஓடி தப்பியுள்ளனர்.

அதனையடுத்து சரிந்து கிடந்த வாகனத்தை பாரம் தூக்கி மூலம் சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது. 

No comments: