நடு இரவில் மனைவி துாங்கிய அறைக்குள் சென்ற கணவன் பின்னர் நடந்தது என்ன ?

நடுராத்திரி தங்கம் தூங்கி கொண்டிருந்த ரூமுக்குள் நுழைந்த கணவன், தேங்காய் வெட்டும் கத்தியை எடுத்து வந்து அவரது கழுத்தை அறுத்துவிட்டார்..
இந்த சம்பவம் இந்தியாவின் குமரியில் நடந்துள்ளது.

குமரி மாவட்டம் இரணியல் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகரன்.42 வயதாகிறது.

தேங்காய் வெட்டும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி தங்கம்.. வயது 37 ஆகிறது.. கல்யாணம் ஆகி 13 வருஷங்கள் ஆகின்றன.. ராகுல் என்ற 11 வயது மகனும், தனுஷியா என்ற 10 வயது மகளும் உள்ளனர்.

ராஜசேகரனுக்கு குடிப்பழக்கம் இருக்கிறதாம்.. இதனால் தினமும் வீட்டில் சண்டையும் தகராறும் வந்துள்ளது.. இந்த சமயத்தில்தான் லாக்டவுன் வந்தது.. அதனால் ராஜசேகரனுக்கு இருந்த வேலையும் கிடைக்கவில்லை

ஒன்றிரண்டு வேலை கிடைத்தாலும், அதில் வந்த பணத்தில் குடித்துவிட்டுத்தான் வீட்டுக்கே வந்துள்ளார். இதனால் தம்பதிக்குள் மேலும் பிரச்சனை அதிகமாகியபடியே வந்தது... வறுமையால் குடும்பமும் நடத்த முடியாமல் தங்கம் தவித்தார். ஒருகட்டத்தில் தானே வேலைக்கு போவது என்று முடிவெடுத்தார்.

ஆனால், தங்கம் வேலைக்கே போககூடாது, வீட்டை விட்டு வெளியே போகவே என்று கறாராக சொன்னார் கணவர். எனினும் பிள்ளைகளுக்கு சாப்பாட்டு செலவு, வீட்டுச்செலவை சமாளிக்க சில நாட்களாக அந்த பகுதியில் உள்ள ஒரு முந்திரி ஃபேக்டரிக்கு வேலைக்கு சென்றார் தங்கம்.. இப்போது வீட்டில் இன்னும் தகராறு வெடிக்க ஆரம்பித்தது.

சம்பவத்தன்று வேலைக்கு போய்விட்டு தங்கம் வீட்டுக்கு வந்தார்... இரவு பிள்ளைகளுடன் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்... அப்போது தள்ளாடி கொண்டே ராஜசேகரன் வந்தார்.. மறுபடியும் சண்டை ஆரம்பமானது.. ஒருகட்டத்தில் போதை அதிகமாகி ராஜசேகரன் தூங்கிவிட்டார்.. நடுராத்திரி திடீரென விழித்தார்.

 தங்கம் ரூமில் தூங்கி கொண்டிருந்தார். அதை பார்த்த ராஜசேகர் மறுபடியும் கோபம் அடைந்தார்

விடிந்ததும் வேலைக்கு சென்றுவிடுவாளே என்று நினைத்து, தேங்காய் வெட்டுவதற்காக வைத்திருந்த அரிவாளை எடுத்து வந்து தூங்கி கொண்டிருந்த தங்கத்தின் கழுத்தை அறுத்துவிட்டார்.. ரத்தவெள்ளத்தில் துடிதுடித்த தங்கம் படுக்கையிலேயே பிணமானார். இதை பார்த்ததும் பயந்துபோய்விட்ட ராஜசேகரன் இன்னொரு ரூமுக்குள் ஓடிப்போய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சத்தம் கேட்டு விழித்து வந்து பார்த்த குழந்தைகள் அலறினர்.. அம்மா ரத்த வெள்ளத்தில், அப்பா தூக்கிலும் தொங்குவதை கண்டு கத்தி கூச்சலிட்டனர். அதற்கு பிறகுதான் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து பார்த்து, இரணியல் போலீசுக்கு தகவல் சொன்னார்கள்.. 2 பேரின் சடலங்களையும் போலீசார் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments: