பெண் தொழிலாளி ஒருவரின் காதுகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட குளவிகள் மீட்பு
பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்
பொகவந்தலாவ சீனாகலை பூசாரி தோட்ட தேயிலை மலையில் தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண் தொழிலாளி மற்றும் வெளிகள உத்தியோகத்தர் ஆகிய இருவர் குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
குளவி கொட்டுக்கு இலக்கான பெண் தொழிலாளி ஒருவர் வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், பெண்ணின் காதில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட குளவிகள் மீட்கப்பட்ட தாகவும் வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
குறித்த தோட்டப்பகுதியில் உள்ள தேயிலை மலையில் இருந்த குளவிக்கூடு கலைந்து வந்து குறித்த தொழிலாளியையும் வெளிகள உத்தியோகத்தரையும் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் காயங்களுக்கு உள்ளான பெண் தொழிலாளி தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments: