புனர் நிர்மாணம் செய்யப்படாத வீதியினால் மாணவர்களும் பொதுமக்களும் அசெளகரியங்களுக்கு உள்ளாகின்றனர்

                                                                                                                                               எச்.எம்.எம்.பர்ஸான்


கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட வாழைச்சேனை – 5 பலாஹ் வீதி புனர் நிர்மாணம் செய்யப்படாமல் உள்ளதால் குறித்த வீதியூடாகப் போக்குவரத்து செய்து வரும் மாணவர்களும் பொதுமக்களும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

குறித்த வீதி புனர் நிர்மாணம் செய்வதற்கு அண்மையில் தோண்டப்பட்டது ஆனால், இதுவரை அவ் வீதி போடப்படவில்லை இதனால் நாளாந்தம் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியில் மூன்று பாடசாலைகள் அமைந்துள்ளன. அவ்வீதியால் மாணவர்கள் பாடசாலைக்கு செல்வது மிகவும் சிரமமாக உள்ளது. அவ் வீதி புனர் நிர்மாணம் செய்யப்படாமல் காணப்படுவதால் அதனால் பயணிக்கும் அரச உத்தியோகத்தர்கள், அவசியத் தேவைகளை நிறைவு செய்யச் செல்லும் பொதுமக்கள் அனைவரும் பல்வேறு அசெளகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர் என்று பிரதேச மக்கள் மேலும் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே, மாணவர்கள், பொதுமக்களின் நலன்கருதி அவசரமாக குறித்த வீதியை புனரமைத்துத் தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: