சிறுமியின் நிர்வாண புகைப்படம் பரிமாற்றம் தொடர்பில் இலங்கையில் இருவர் கைது

13 வயது சிறுமியின் நிர்வாண புகைப்படங்களை தொலைபேசியில் வைத்திருந்த இருவர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.மினுவாங்கொடை பகுதியில் வைத்து  கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது மகளின் நிர்வாண புகைப்படங்கள் இருவரிடம் இருந்து மேலும் இரண்டு பேருக்கு வழங்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண்ணிண் தாய் காவற்துறையில் பதிவு செய்த முறைப்பாடுக்கமையவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களின் தொலைபேசியை பரிசோதணை செய்த போது பாதிக்கப்பட்ட சிறுமியின் 20 நிர்வாண புகைப்படங்களும் காணொளி ஒன்றும் கிடைக்கப்பெற்றதாக காவற்துறை குறிப்பிட்டுள்ளது.

சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் காவற்துறை அறிவித்துள்ளது

No comments: