நிர்ணய விலையை மீறி சந்தையில் தேங்காயினை விற்பனை செய்வோரை கைது செய்யத் தீர்மானம்


நிர்ணய விலையை மீறி சந்தையில் தேங்காயினை விற்பனை செய்வோரை கைது செய்வதற்கான விசேட சுற்றிவளைப்புகளை முன்னெடுக்கவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

நேற்றிரவு வெளியிடப்பட்ட தேங்காய்க்கான நிர்ணய விலையை உள்ளடக்கிய விசேட வர்த்தமானி அறிவித்தலை மீறி அதிக விலையில் விற்பனை செய்வோருக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ய உள்ளதாக அந்த அதிகார சபையின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டதாக தெரியவந்துளள்து.

நேற்று முதல் அமுலாகும் வகையில் தேங்காய் ஒன்றின் வலை 60 முதல் 70 ரூபாவாக நிர்ணயித்து நுகர்வோர் அதிகார சபையினால் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய 13 அங்குலத்திற்கு அதிகமான தேங்காய் 70 ரூபாய்க்கும்,12 முதல் 13 அங்குலம் வரையிலான தேங்காய் 65 ரூபாய்க்கும்,12 அங்குலத்திற்கு குறைவான தேங்காய் 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

No comments: