கொரோனா தொற்றுக்கு மத்தியில் சிறந்த செயற்றிட்டங்களை முன்வைத்த நாடுகளில் இலங்கையும் முன்னிலை வகிக்கின்றது


கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு மத்தியில் சிறந்த செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்திய நாடுகளில் இலங்கையும் முன்னிலை வகிக்கின்றது என நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் குறிப்பிட்டதாக தெரியவந்துள்ளது.

ஆகவேதான் உலக நாடுகளின் தலைவர்களும் இதற்குப் பாராட்டு தெரிவித்துள்ளார்கள் என்றும் நாட்டின் பொருளாதார சவால்களும் இதேபோன்று வெற்றி கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அரச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் கருத்து தெரிவித்த அஜித் நிவாட் கப்ரால் தெளிவான முறையான செயற்றிட்டத்தின் கீழ், நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்ததோடு,இதன் மூலம் மக்களுக்கு மத்தியில் அரசாங்கம் மீதான நம்பிக்கை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் நாட்டின் வங்கித் துறை வலுப்படுத்தப்படுவதோடு, தொழில் முயற்சியாளர்களையும் பாதுகாப்பது அவசியமாகும் என்றும் அஜித் நிவாட் கப்ரால் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments: