ஐந்தரை மணித்தியாலங்களுக்கு பிறகு போக்குவரத்து வழமைக்கு திரும்பியது

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்

பலாங்கொட பொகவந்தலாவ பிரதான வீதியின் பலாங்கொட பின்னவலை புதுக்காடு

பகுதியில் பெக்கோ இயந்திரம்  ஒன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியமையினால் ஐந்தரை மணித்தியாலங்களுக்கு பிறகு குறித்த வீதியின் போக்குவரத்து சீர்செய்யப்பட்டுள்ளதாக பின்னவலை பொலிஸார் தெரிவித்தனர். 

05.09.2020.சனிக்கிழமை பிற்பகல் 12.30மணியவில் பெக்கோ இயந்திரம் விபத்துக்குள்ளாகி பிரதான வீதியில் குடைசாய்ந்தமையில் பலாங்கொட பொகவந்தலாவ, எம்பிலிபிட்டிய, மரத்தென்ன, பின்னவலை ஆகிய பகுதிகளுக்கு சென்ற பயணிகள் பல்வேறு அசெளகரியங்களை எதிர் நோக்கியிருந்தனர்.

அந்தவகையில் பின்னவலை பொலிஸார் மற்றும்  வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர் இணைந்து விபத்துக்குள்ளான பெக்கோ இயந்திரத்தை கேபல் ஊடாக தூக்கி  இயந்திரத்தை சரி செய்தனர். அதனை தொடர்ந்து போக்கவரத்து வழமைக்கு திரும்பியதாக பின்னவலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
No comments: