நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி தற்துணிவுடன் செயற்பட வேண்டும் - ஜீ.எல்.பீரிஸ் தெரிவிப்பு


நல்லாட்சி அரசாங்கத்தில் ஜனாதிபதியும் பிரதமரும் முரண்பட்டுக் கொண்டதாலேயே ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலை தடுக்க முடியாமல் போனது என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்,ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு இதனைத் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் தெரிவித்ததாவது,

அரசியலமைப்பின் 19 வது திருத்தத்தினால் முத்துறையினருக்கிடையில் ஏற்பட்ட அதிகார முரண்பாடே இதற்கு பிரதான காரணம் என குறிப்பிட்டதோடு,தற்போது 20வது திருத்தம் தொடர்பாக எதிர்த்தரப்பினர் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக மாறுப்பட்ட கருத்துக்களை தெரிவித்து வருவதாகவும் அவர்கள் கொண்டுவந்த 19வது திருத்தத்தினால் நாட்டுக்கு பாரதூரமான விளைவுகளே ஏற்பட்டன என்றும் அவர் சுட்டிக்காட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இவ்வாறான நிலை மீண்டும் தோற்றம் பெற கூடாது என்பதற்காகவே 20வது திருத்தம் கொண்டு வரப்பட்டது என அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி தற்துணிவுடன் செயற்பட வேண்டும் என்பதற்காகவே  20வது திருத்தத்தில் ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: