கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு


தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கான விண்ணப்பப் படிவங்களில் காணப்படும் தவறுகளைத் திருத்திக் கொள்வதற்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் இன்றுடன் நிறைவடையவுள்ளது.

குறித்த விண்ணப்பங்களை மீள்பரிசீலனை செய்தல் மற்றும் அவற்றில் உள்ள தவறுகளைத் திருத்திக் கொள்வதற்கு 05 நாட்கள் அவகாசம் கல்வி அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் குறித்த விடயம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் இன்றைய தினத்திற்குள் www.moe.gov.lk என்ற இணையத்தளத்தில் தேசிய கல்வியியற் கல்லூரிகளில் இணைந்து கொள்வதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ள விண்ணப்பதாரிகள், அதில் காணப்படும் தவறுகளைத் திருத்தம் செய்ய முடியும் என கல்வி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

No comments: