ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து தடை

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் அட்டன் கொழும்பு பிரதான வீதியில் பாரிய கற்பாறையொன்று சரிந்து வீழ்ந்ததன் காரணமாக வீதியின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளமையினால் வாகன சாரதிகள்  மாற்று வீதியை பயன்படுத்துமாறு கினிகத்தேனை பொலிஸார் தெரிவிக்கிறனர். 

கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரம்பாதெனிய பகுதியிலே இன்று காலை 07 மணியளவில் பாரிய கற்பாறையொன்று  சரிந்து பிரதான வீதியின் குறுக்கே வீழ்ந்துள்ளதுடன், மேலும் கற்பாறைகள் சரிவதற்கான சாத்தியகூறுகள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாகன சாரதிகள்  கலுகல நோட்டன் பிரிட்ஜ் லக்ஷபான  வீதியையும்,  தியகல நோட்டன் பிரிட்ஜ் வீதியையும் பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
No comments: