நியூ டயமன்ட் கப்பல் தொடர்பிலான் ஆய்வு அறிக்கை சட்டமா அதிபரிடம் கையளிப்பு


தீப்பற்றலுக்குள்ளான எம்.டி.நியூ டயமன்ட் கப்பலில் உள்ள எண்ணெய் மற்றும் அதனை அண்டிய கடற்பரப்பில் கசிந்த எண்ணெய் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை சட்டமா அதிபரிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த அறிக்கையின் அனைத்து நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ளதாக கடல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளதோடு,அதனை சட்டமா அதிபருக்கு அனுப்புவதற்கான செயற்பாடுகளும் நிறைவடைந்துள்ளதாக அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை குறித்த கப்பலின் தலைவரை எதிர்வரும் 28ம் திகதி கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


No comments: