அம்பறை கோமாரி பிரதேசத்தில் வீசிய பலத்த காற்றினால் கடை ஒன்று சேதம் - போக்குவரத்து பாதிப்பு

தற்போது போக்குவரத்து சீராக்கப்பட்டுள்ளது !

அம்பாறை மாவட்டத்தில் இன்று பலவேறு இடங்களில் பரவலாக பலத்த மழை பெய்துள்ளது.

இந் நிலையில் பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கோமாரி பிரதேசத்தில் 4.45 மணியளவில் வீசிய பலத்த காற்றினால் ஞனமுத்து மோகனராசா என்பவரின் கடை  முற்றாக தேசமடைந்திருப்பதுடன் வீட்டின் ஜன்லில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

அத்துடன் பாரிய மரம் ஒன்று  பிரதான வீதியின் மத்தியில் வீழ்ந்துள்ளதால் பொத்துவில் பிரதான வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மரத்தினை அகற்றும் பணி தற்போது பிரதேச சபை மற்றும் கிராம மக்களாலும் இராணுவத்தினராலும் முன்னெடுக்கப்படுகின்றது.

UPDATED 

தில்லைவாணி, கிராம அபிவிருத்தி சங்க தலைவர் 

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள இரண்டு கடை உரிமையாளர்களின் விபரம் கிடைக்கப் பெற்றுள்ளது

இளையதம்பி கமலேஸ்வரி, மற்றும் சின்னையா இரட்ணசிங்கம் ஆகிய இருவரினதுமாக 03 கடைகள் தேசமடைந்துள்ளது 

முழுவிபரங்களும் அகத்தியன் இலத்திரனியல் பத்திரிகையில் எதிர்பாருங்கள் 

No comments: