வாராந்த அமைச்சவைக் கூட்டம் இன்று முதல் ஒவ்வொரு திங்கட்கிழமை இடம்பெறும்


வாராந்த அமைச்சரவைக் கூட்டம் இன்று முதல் ஒவ்வொரு திங்கட்கிழமையும் இடம்பெறும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று மாலை 4 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு செவ்வாய்க்கிழமைகளில் நடைபெறும் என  அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் அமைச்சரவைக் கூட்டம் புதன்கிழமையும் அமைச்சரவை அமைச்சர்களின் ஊடகவியலாளர் சந்திப்பு வியாழக்கிழமையும் நடத்தப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments: