நாளை முதல் மீண்டும் வழமைக்கு திரும்பும் பாடசாலைகள்

நாட்டில் காணப்படும் அனைத்து அரச பாடசாலைகளினதும் தரம் 6 முதல் 13ம் தரம் வரையான மாணவர்களுக்கான பாடசாலைகள் நாளை முதல் வழமை போன்று  இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரையில் வழமை போன்று பாடசாலை இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் 1ம்  தரம் தொடக்கம்  5ம்  தரம் வரையான பாடசாலைகள் செப்டம்பர் 8ம் திகதி முதல் வழமைக்கு திரும்பும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: